ஸ்ரீவைகுண்டம் - நத்தம் நவ திருப்பதி கோயில் கொடியேற்றம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

ஸ்ரீவைகுண்டம் - நத்தம் நவ திருப்பதி கோயில் கொடியேற்றம்.

ஸ்ரீவைகுண்டம் - நத்தம் நவ திருப்பதி கோயில் கொடியேற்றம். 

ஸ்ரீவைகுண்டம் பிப்ரவரி 13‌. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் இரண்டாம் திவ்ய தேசமான நத்தம் (வரகுண மங்கை) விஜயாசன பெருமாள் கோவிலில் மாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். 

இந்த ஆண்டும் நேற்று கொடியேற்கறம் நடந்தது. காலை 7 மணிக்கு விஸ்வரூபம். 8.30 மணிக்கு நித்தியல். 9.45 மணிக்கு உற்சவர் எம்இடரகடிவான் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் கருட மண்டபத்திற்கு எழுந்தருளினார். 10.20 மணிக்கு கொடிப் பட்டம் மாடவீதி சுற்றி வந்தது. 10.55 மணிக்கு அர்ச்சகர் ராஜகோபாலன் கொடியேற்றினார். 

தினசரி மாலை 6 மணிக்கு ஹம்ஸ, சிம்ம, ஹனுமந்த, சேஸ், வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது. பிப்ரவரி 16 ந்தேதி திங்கள் கிழமை கருடசேவை நடைபெற உள்ளது. 

அடுத்து யானை, சந்திர பிரபை, பரங்கி நாற்காலி குதிரை, பல்லக்கு., வெட்டிவேர் சப்பரம் ஆகிய வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. 

 இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் கோவிந்தன். கண்ணன். சுதர்ஸன். ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன். தேவராஜன். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நிஷாந்தினி 

அறங்காவலர் குழு தலைவர் அருணா தேவி கொம்பையா உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம் பேக்கிரி முருகன்‌. முத்துகிருஷ்ணன்‌ பாலகிருஷ்ணன். டி. வீ எஸ் கல்சுரல் சாம்ஸ்கிரீட் பவுண்டேசன் உதவி மேலாளர் பரகாலசிங்கன். களப்பணியாளர்கள் பத்மநாபன் , திருவேங்கடத்தான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad