ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் அரசு மடிக்கணினி வழங்கல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் அரசு மடிக்கணினி வழங்கல்.

ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி அரசு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் கல்லூரி தாளாளர் டாக்டர் காபிரியேல் தேவயிரக்கம் ஜெபராஜன் தலைமை தாங்கினார். கல்லூரி பொறுப்பு முதல்வர் டாக்டர் ஆக்னஸ் பிரேமா மேரி முன்னிலை வகித்தார். 

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாளை. டக்கம்மாள்புரம் ஜெயராஜ் அன்ன பாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஸ்மைலி, துணை முதல்வர் காட்டன், கிராம நிர்வாக அலுவலர் சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டனர் 

கல்லூரி தாளாளர் டாக்டர். காபிரியல் தேவயிரக்கம் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு சுமார் 527 அரசு மடிக்கணிணிகளை வழங்கினர். 

இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் அறிவுறுத்தலின்படி பொறுப்பு முதல்வர் டாக்டர் ஆக்னஸ் பிரேமா மேரி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் டாக்டர் ஞானசெல்வன், ஜாப்னி பென்சியா ஒருங்கிணைப்பு அலுவலர் பிரேமா, பேராசிரியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்கள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad