மத்திய மாநில அரசு மற்றும் பொதுத துறை ஓய்வூதியர் ஒருங்கிணைப்பு குழு வினர் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு ஆர்ப்பாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 பிப்ரவரி, 2026

மத்திய மாநில அரசு மற்றும் பொதுத துறை ஓய்வூதியர் ஒருங்கிணைப்பு குழு வினர் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு ஆர்ப்பாட்டம் !

மத்திய மாநில அரசு மற்றும் பொதுத துறை ஓய்வூதியர் ஒருங்கிணைப்பு குழு வினர் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு  ஆர்ப்பாட்டம் !
வேலூர் , பிப் 12 -
வேலூர் மாவட்டம் மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் வேலூர் மாவட்ட கிளை சார்பில் உழைக் கும் மக்களின் உரிமைகளைக் காக்க நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக ஆதரவு ஆர்ப்பாட்டம் இன்று வேலூர் பிஎஸ்என்எல் சங்க அலுவலகம் முன்பு நடைபெற்றது.  இன்றைய ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட தலைவர் எம்.பன்னீர்செல் வம் தலைமை தாங்கினார் மாவட்ட பொருளாளர் எ.கதிர்அகமது வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் பி. லோக நாதன் கோரிக்கை விளக்க உரையாற்றி னார்‌ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரி யர் நல சங்க மாவட்ட தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஆ.ஜோசப்பன்னய்யா அனை த்து துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி, நகர தொழிற்சங்கங்களின் கூட்டமைப் பின் கன்வினர் சி.ஞானசேகரன் பிஎஸ் என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்ட செய லாளர் பி.முருகன், அஞ்சல் ஆர் எம் எஸ் ஓய்வூதியர் சங்க மாநில செயல் தலை வர் ஜி.நரசிம்மன்,  அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பி.குமரேசன், எல்ஐசி ஓய்வூதியர் சங்க செயலாளர் டி.செந்தில்வேல், ரயில்வே துறை ஓய்வூதியர் சங்க செயலாளர் பிரபாசந்தர், மின்வாரிய ஓய்வூதியர் சங்க பிச்சுமணி பொதுத்துறை காப் பீட்டுக் கழக ஓய்வூதியர் சங்க கே.குமார் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர் முடிவில் மாவட்ட பொருளாளர் பி.ஞான சேகரன் நன்றி கூறினார் ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் 35 மகளிர் உள்பட 160 ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.  காலை 10 மணிக்கு தொடங்கி ஆர்ப்பாட்டம் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெற்றது.  ஓய்வூதியர் நலன்களுக்கு எதிரான வேலிடேசன் சட்டத்தை திருப்ப பெற வேண்டும், தொழிலாளர்கள் நலனுக்கு எதிரான நான்கு சட்டத் தொகுப்புகளை உடனடியாக ஒன்றிய அரசு வாபஸ் பெற வேண்டும் மக்கள் நலனுக்கு எதிரான மின்சார சட்டம் 2025ஐ வாபஸ் பெற வேண்டும் 8வது ஊதியக்குவிற்கான குறிப்பாணையில் ஓய்வூதியம் மாற்றத் தை இணைத்திடு, மகாத்மா காந்தி பெயரை நீக்கி விட்டு புதிய பெயரை கொண்டுவரப்பட்டதை ஒன்றிய அரசே இரத்து செய் என கோஷங்கள் எழுப்பபட்டன.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad