ஒன்றிய செயலாளர் பூந்தோட்ட மனோகரன் தலைமையில் நிர்வாகிகள் வழங்கினர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, அன்புமணியின் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதிகளை அளித்துள்ளார். விடியல் ஆட்சி இந்த பில்லே சாட்சி என்ற அடிப்படையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் அறிவுறுத்தலின்படி திருச்செந்தூர் ஒன்றியம் வீரபாண்டியன் பட்டணம் ஊராட்சியில் ஒன்றிய செயலாளர் பூந்தோட்டம் மணோகரன் தலைமையில் மாவட்ட மீனவர் அணி தலைவர் ரெஜிபர்ட் பர்னாந்து முன்னிலையில் வீடுவீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய நோட்டீஸ் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் கவுன்சிலர் நடுவை செல்வன், காணம் அர்ச்சுனன், மகளிர் அணி சங்கரி, வீரபாண்டியன் பட்டணம் செயலாளர் கெய்வின், அந்தோணி, மகேஷ், எடிசன் சுயம்பு, டெணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட கலை பிரிவு செயலாளர் டாக்டர் என். சுரேஷ் சிறப்பாக செய்திருந்தார்.
தமிழககுரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக