திருத்தல அதிபர் சில்வெஸ்டர் தலைமையில் சிறப்பு திருப்பலி
புனித வெள்ளியை முன்னிட்டு உலகம் முழுவதும் கிறிஸ்தவா்களின் தவக்காலம் தொடக்க நாளாக, சாம்பல் புதன் இன்று முதல் கடைபிடிக்கப்படுகிறது.
தூத்துக்குடி மறை மாவட்டத்திலும் மேதகு ஆயர் ஸ்டீபன் அந்தோணி வழிகாட்டுதலின் படி அணைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியான திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை இயேசுவின் திருஇருதய அற்புத கெபி திருத்தலத்தில் இன்று திருத்தல அதிபர் சில்வெஸ்டர் தலைமையில் சிறப்புத் திருப்பலிநடைபெற்றது.
இந்த திருப்பலியில் கலந்து கொண்ட கிறிஸ்தவா்கள் நெற்றியில் சாம்பலை சிலுவை அடையாளமாக பூசி கொண்டு தவக்காலத்தை தொடங்கினர். இன்று தவக்காலம் முதல் 40 நாட்கள் முடியும் வரை அசைவ உணவுகள், போதைப் பொருள்களை தவிா்த்து சுத்த போஜனம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், தங்களின் தீய பழக்கங்களை களைவதற்கு இந்த தவ நாட்களை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
இதில் அருட் தந்தையர்கள், அருட்சகோதரிகள் பங்கு இறைமக்கள் பலர் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுப்பட்டனர். இதற்கான ஏற்படுகளை திருத்தல அதிபர் சில்வெஸ்டர், உதவி பங்கு தந்தை டைட்டஸ் மற்றும் திருத்தல நிதிக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
தமிழர் குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக