திருவண்ணாமலையில் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம் பணி தீவிரம்!
திருவண்ணாமலை , பிப் 2 -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மில்லத்நகர் பகுதியில் தோக்க வாடி ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால் வாய்களை ஆக்கிரமிப்பு செய்த ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள் தடுத்து நிறுத்திய ஏரி ஆயக்கட்டு நிர்வாகிகள் மற்றும் நீர்வளத்துறை அரசு அதிகாரி கள்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மில்லத்நகர் பகுதியில் தோக்க வாடி ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால் வாய்களை ரியல் எஸ்டேட் விற்பனையா ளர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை ஏரி ஆயக்கட்டு நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் தடுத்து நிறுத்தி பின்னர் நீர்வ ளத்துறை அலுவகத்தில் தகவல் தெரி வித்து பின்னர் நீர்வளத்துறை அதிகாரி (பாசன பிரிவு) துரை AE அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஜே சி பி எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றப் பட்டது. பின்னர் ஆக்கிரமிப்பு செய்த ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஆயக்கட்டு நிர்வாகிகளும் தோக்கவாடி பொதுமக்கள் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர்
-கலையரசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக