திருச்செந்தூரில் சாரண சாரணியர் இயக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 பிப்ரவரி, 2026

திருச்செந்தூரில் சாரண சாரணியர் இயக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருச்செந்தூரில் சாரண சாரணியர் இயக்க பயிற்சி முகாம் நடைபெற்றது

திருச்செந்தூர், பிப்ரவரி 25, பாரத சாரண சாரணியர் இயக்கம், திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தின் சார்பில், திருச்செந்தூர் நகராட்சி துவக்கப்பள்ளியில் குருளையர் மற்றும் நீலப் பறவையினருக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

பாரத சாரண, சாரணியர் இயக்க திருச்செந்தூர் கல்வி மாவட்ட செயலாளர் சாமுவேல் சத்திய சீலன் தலைமை உரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் வட்டாரக் கல்வி அலுவலர் பாப் ஹையஸ் கலந்து கொண்டார். 

பயிற்சியாளர் நாராயணன், குருளையர் மற்றும் நீலப் பறவையினருக்கு பயிற்சிகளை வழங்கினார். பொறுப்பாசிரியர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. 

தலைமையாசிரியை சிவகாமி, சாரண இயக்க ஆசிரியைகள் நிர்மலாதேவி மற்றும் பேச்சியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் சாரணர் இயக்க மாவட்ட துணை ஆணையர் ஸ்டீபன் பிரேம்குமார் நன்றி கூறினார்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad