பெரியார் நகரில் உள்ள பொதுமக்கள் பட்டா வழங்க கோரி நகர மன்ற தலைவர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 பிப்ரவரி, 2026

பெரியார் நகரில் உள்ள பொதுமக்கள் பட்டா வழங்க கோரி நகர மன்ற தலைவர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு !

பெரியார் நகரில் உள்ள பொதுமக்கள் பட்டா வழங்க கோரி நகர மன்ற தலைவர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு !
குடியாத்தம் ,பிப் 12 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பெரியார் நகரில். உள்ள பொதுமக்கள். பட்டா வழங்க கோரி கோரிக்கை . மனு அளித் தனர் மேற்படி இடத்தில் வசிக்கும் பொது மக்கள் அங்கு குடியிருக்கும் மீதமுள்ள 23 குடும்பங்களுக்கு ஆதரவாக பட்டாவழங்க கோரி குடியாத்தம் நகர மன்ற தலைவர் , சௌந்தரராஜன் மற்றும் தாசில்தார் ஆகி யோரிடம் மனு அளித்தனர். அப்பொழுது பொதுமக்கள் கூறியதாவது, ஆதிதிராவி டர் பகுதியில் வசிக்கும் நாங்கள் 50 வருட ங்களாக ஒன்றாக வசித்து வருகிறோம். இப்பொழுது ஒருவரின் தனிப்பட்ட காழ் ப்புணர்ச்சியின் காரணமாக பட்டா வழங்காத இடத்தை பூங்கா அமைக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது . நீதிமன்றத் தில், தமிழ்நாடு அரசு அந்த இடத்தில் வசிக்கும் மக்களுக்கு அந்த இடத்தை பட்டா அளிக்க முன் வருவதாக நீதிமன் றத்தில் உறுதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் .அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப் பும் அதுவாகவே உள்ளது ஆதிதிராவிடர் மக்களான பெரியார் நகர் வாசிகள் இந்த திராவிட மாடல் அரசு நல்லது செய்யும்  என்ற நம்பிக்கையில் எதிர்பார்த்து உள்ளனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad