தூத்துக்குடி நாசரேத் திருமண்டல நிர்வாகி தேர்தல் - பேராயர் ஐசக் வரபிரசாத்திடம் ஆசி பெற்ற எஸ்.டி.கே.ராஜன் அணி வேட்பாளர்கள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல நிர்வாகி தேர்தல் - பேராயர் ஐசக் வரபிரசாத்திடம் ஆசி பெற்ற எஸ்.டி.கே.ராஜன் அணி வேட்பாளர்கள்.

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல நிர்வாகி தேர்தலில் போட்டியிடும் எஸ்.டி.கே.ராஜன் அணி வேட்பாளர்கள் பேராயர் ஐசக் வரபிரசாத்திடம் ஆசி பெற்றனர். 

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல் நாசரேத்தில் நாளை 16 ந் தேதி திங்கள்கிழமை நடைபெற உள்ளது. 

இதில் எஸ்.டி.கே. ராஜன் அணி சார்பில் உப தலைவராக குருவானவர் மோசஸ் ஜெபராஜ், குருத்துவச் செயலராக குருவானவர் டி.ஜி.ஏ. தாமஸ், லே செயலராக எஸ்.டி.கே. ராஜன், திருமண்டல பொருளாளராக டி.கே.எம். ஜான்சன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
 
இந்நிலையில் திருமண்டல தேர்தலில் எஸ்.டி.கே. ராஜன் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பிரதம பேராயரின் ஆணையாளர் பேராயர் ஐசக் வரபிரசாத்தை சந்தித்து இறை ஆசி பெற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad