கிறிஸ்தவ தேவாலயங்களில் நல வாரிய தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கலந்தாய்வுக் கூட்டம் !
வேலூர் , பிப் 19 -
வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கிறிஸ்துவ தேவாலயங் களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத் தலைவர் முனைவர் விஜிலா சத்யானந்த் அவர்கள் தலைமையில், வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி. இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் கிறிஸ் துவ மக்களுடனான கலந்தாய்வு கூட்டம் இன்று (19.02.2026) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் வாரிய துணைத்தலைவர் ஆர் .தயா நிதி , மாவட்ட வருவாய் அலுவலர் மா. சிவசுப்பிரமணியன், வாரிய உறுப்பினர் கள் இமானுவேல், மோகன்தாஸ், மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் திருமதி ஜெயசித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக