விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவ நாதனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் தாய் லாந்து பல்கலைக் கழகம் !
காட்பாடி , பிப் 19 -
வேலூர் மாவட்டம் காட்பாடி யில் செயல்பட்டு வரும் விஐடி பல்கலைக் கழகத் துணைத் தலைவர் சங்கர் விசுவ நாதன் அவர்களுக்கு, தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் உள்ள ராஜ மங்கலா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (RMUTK) “கௌரவ டாக்டர்” பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. இந்நிகழ்வில் விஐடி வேந்தர் விசுவநாதன், உதவி துணைத் தலைவர் காதம்பரி , டாக்டர் ஏ.ஷ்ரவன் கிருஷ்ணா உள்ளிட்ட முக்கிய பிரமுகர் கள் கலந்து கொண்டனர். கல்வித் துறை யில் சங்கர் விசுவநாதன் ஆற்றி வரும் பணிகளைப் பாராட்டிப் பல்வேறு தரப்பி னரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்திற்கு பெருமைக்கே பெருமை சேர்க்கும் விதமாக தாய்லாந்து நாட்டின் பாங்காங் நகரில் உள்ள ராஜ மங்கலா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (RMUTK) “கௌரவ டாக்டர்” பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. நன்றி தெரிவிக்கும் வகையில் சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நலச் சங்கம் மாவட்ட செயலாளர் சரவணன் சங்கம் சார்பில் வாழ்த்துக் களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக