உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தீர்த்த கிணற்றில் யுஎஸ்எஸ் காலனியை சேர்ந்த மணிகண்டன் (29) என்பவர் தவறி விழுந்து உயிரிழந்தார். தகவல் அறிந்த
உடுமலை தீயணைப்பு துறையை சேர்ந்த மீட்பு குழுவினர்
மணிகண்டனின் சடலத்தை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆகியும் அவரது சடலம் இன்னமும் மீட்கப்படாததால்
அவரது உறவினர்கள் தேசிய நெடு ஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த் தைக்கு பிறகு சமாதானம் ஆன போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணைதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக