தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியர் மர்ம மரணம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியர் மர்ம மரணம்.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியர் மர்ம மரணம்

பிப்.12- தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார் புரத்தைச் சேர்ந்தவர் ஜெய சுப்பிரமணியன் மகன் சரவணன் (36). இவர் தூத்துக்குடியில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் தனியார் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். 

வழக்கம்போல் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு சரவணன் பணிக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை பணி நேரம் முடிந்தவுடன் சக ஊழியர்கள் அவரைத் தேடியுள்ளனர். அப்போது, அங்குள்ள ஒரு கட்டடத்தின் அருகே சரவணன் மயங்கிய நிலையில் இரத்த வாந்தி ஏற்பட்டு கிடப்பதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காகத் என்.டி.பி.எல் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சரவணன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து தெர்மல் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad