வேலூரில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பி னர் நன்றி அறிவிப்பு மாநாடு பிரச்சார இயக்கம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 பிப்ரவரி, 2026

வேலூரில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பி னர் நன்றி அறிவிப்பு மாநாடு பிரச்சார இயக்கம் !

வேலூரில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பி னர் நன்றி அறிவிப்பு மாநாடு  பிரச்சார இயக்கம் !
வேலூர் , பிப் 5 -
             வேலூர் மாவட்டம் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் உறுதியளிக்கப் பட்ட ஓய்வூதியம், சத்துணவு அங்கன் வாடி  ஊழியர்களின் ஓய்வூதிய உயர்வு, குடும்ப ஓய்வூதிய திட்டம், பகுதிநேர ஆசிரியர்கள் குறித்த அறிவிப்பு, சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட அறிவிப்பு களை வெளியிட்டு ஆசிரியர் அரசு ஊழி யர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிய தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங் கேற்கும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர் அரசு ஊழியர் அரசுப் பணியாளர் நடத்தும் நன்றி அறிவிப்பு மாநாட்டில் ஆசிரியர் அரசு ஊழியர் அரசுப் பணியாளர் பங் கேற்க பிரச்சார இயக்கம் இன்று வேலூர் மாவட்டத்தில் நடைபெற்றது.மாநிலஒருங் கிணைப்பாளரும் தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர் சங்க தலைவரும் கு.வெங்கடேசன் தலைமையில் பிரச்சார இயக்கம் பள்ளிகொண்டா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது.    மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் செ.நா.ஜனார்த்தனன், முகமதுஷா நவாஷ், அக்ரி இராமன், வேலூர் மாவட்ட  ஒருங்கிணைப்பாளர்கள் ட்டி.டி.ஜோஷி, எம்.ஜெயகாந்தன்,ஆ.ஜோசப்அன்னையா, ஜி.சீனிவாசன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஜி.டி.பாபு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர், மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன் ஆகி யோர் முன்னிலையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.பிரச்சார இயக்கம் பள்ளி கொண்டா, அணைக்கட்டு, பொய்கை, கொணவட்டம், வேலூர் ஆகிய பகுதி களில் உள்ள அரசு உயர்நிலை மேல் நிலை பள்ளிகள், வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், சென்று இறுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.
வேலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப் பாளர் கு.வெங்கடேசன் செய்தியாளர் களை சந்தித்தார் அப்போது அவர் கூறிய தாவது கடந்த 23 ஆண்டுகளாகளாக நாம் கோரி வந்த கோரிக்கையில் மாற்றம் ஏற்பட்டு புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூ திய திட்டம் சத்துணவு அங்கன்வாடி  ஊழியர்களின் ஓய்வூதிய உயர்வு, குடும்ப ஓய்வூதிய திட்டம், பகுதிநேர ஆசிரியர்கள் குறித்த அறிவிப்பு, சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டு ஆசிரியர் அரசு ஊழியர் களின் வாழ்வில் ஒளி ஏற்றிய  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற் கும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர் அரசு ஊழியர் அரசுப் பணியாளர் நடத்தும் நன்றி அறிவிப்பு மாநாட்டில் ஆசிரியர் அரசு ஊழியர் அரசுப் பணியாளர் பங் கேற்க பிரச்சார இயக்கம் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்றது.  நன்றி தெரி விக்கும் மாநாடாக மட்டும் அல்லாமல் எங்களின் இதர கோரிக்கைகளையும் வென்றெடுக்கும் மாநாடாக அமையும் இந்த மாநாட்டில் வேலூர் மாவட்டத்தில் இருந்து 1000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பணியார்கள் பங் கேற்க திட்டமிட்டுள்ளனர் என்றார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad