அர் ரஹ்மான் சுன்னத்வல் ஜமாஅத் மஸ்ஜித் மற்றும் ஜாமிஆ மதினத்துல் இல்ம் மதரஸா இணைந்து நடத்தும் ஒரே நாளில் முழு குர்ஆனையும் மனனமாக ஓதும் நிகழ்ச்சி
திருப்பூர் மாவட்டம் மங்கலம் ரம்யா கார்டன் பகுதியில் உள்ள அர்ரஹ்மான் சுன்னத்வல் ஜமாஅத் மஸ்ஜிதில் இமாமாக பணியாற்றும் மௌலவி எம். ஜாஃபர் சாதிக் சிராஜி அவரின் மகன் ஹாபிழ் ஜ.முஹம்மது இப்ராஹீம் ஒரே நாளில் முழு குர்ஆனையும் மனனமாக ஓதினர் . (அதிகாலை 6 45 மணி முதல் இரவு 8 15 வரை)
பள்ளி தலைவர் ஹாஜி முஹம்மது முஸ்தபா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் இறுதியில் அர்ரஹ்மான் மஸ்ஜித்தின் நிர்வாகிகள் மற்றும் முஹல்லாவாசிகள் குர்ஆன் ஓதியவரை பொன்னாடையும் சீல்டும் கொடுத்து கண்ணியப்படுத்தினார்கள்
இறுதியில் ஹாபிழ் ஜ.முஹம்மது இப்ராஹிம் கத்மல் துஆ ஓத வேலூர் ஜாமிஆ மதீனத்துல் இல்ம் மதரஸாவின் ஆசிரியர் மௌலானா மௌலவி ஹாபிழ் உமர் அலிஹழ்ரத் அவர்கள் இறுதித் துஆ ஓதி இந்த நிகழ்ச்சியினை நிறைவு செய்தார்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக