திருப்பூர் மாவட்ட நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பின் அவசர கூட்டம் பல்லடம் சாலையிலுள்ள தென்னம்பாளையம் பெப்சி ஓட்டலில் நடைபெற்றது
இதில் கூட்டமைப்பு நிர்வாகிகள் நல்லூர் சண்முக சுந்தரம், கே.ஏ.கே.கிருஷ்ணசாமி, ஜான்சாமுவேல், மணிக்குமார், சிந்துசுப்பிரமணியம், இராதாகிருணன், காதர்பட்ஷா, ஹரிகரன், இராமர், ரவி, ராஜசேகர், கோவிந்தராஜ், கரைப்புதூர் செல்வராஜ், பத்து ரூபாய் இயக்க மாவட்ட செயலாளர் செல்வம், ஈ.பி.அ.சரவணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
1. திருப்பூர் மாவட்ட நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளராக உள்ள ஈ.பி.அ.சரவணன் அவர்கள் திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள நெருபெரிச்சல் பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள ஒரு திருமண மண்டபத்தை அகற்றக் கோரி புகார் மனு கொடுத்ததன் காரணமாக அந்த மண்டபத்தின் அறக்கட்டளையைச் சார்ந்த சிலர் ஈ.பி.அ.சரவணன் வீடு தேடிச் சென்று மேற்கூடிய பிரச்சனையை கைவிட்டு ஒதுங்கிக் கொள்ளுமாறு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மேலும் ஈ.பி.அ.சரவணன் இது குறித்து காவல்துறையிடம் பல்வேறு முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க மறுத்ததுள்ளனர் எனவே மாநகர காவல்துறை மேற்படி ஈ.பி.அ.சரவணன் அளித்த புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்து பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென கூட்டமைப்பின் சார்பில் வலியுறுத்தப்படுகிறது.
2. திருப்பூர் மாநகரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு தொடர்ச்சியாக பண்டிகை காலங்களில் நலத்திட்டம் மற்றும் இதர உதவிகள் செய்து வருகின்ற செயலை கூட்டமைப்பு பாராட்டுகிறது.
3. திருப்பூரில் மாநகர பகுதியில் அரசு அனுமதி இல்லாமலும் மற்றும் மாநகராட்சி அங்கீகாரம் இல்லாமலும் பல அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டப்பட்டு மிகக் குறைந்த வரி (நிர்ணயிக்கப்பட்டு) வருவாய் இழப்புடன் வசூலிக்கப்படுகிறது. மேலும் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் நேரிடையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
4. திருப்பூர் மாநகராட்சியில் 3 மாதத்திற்கு ஒரு முறை நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும். 1986-ன் சட்டப்படி நடத்த வேண்டும், ஆனால் மாநகராட்சி இதுவரை நுகர்வோர் குறை தீர்ப்பு இதுவரை நடத்தப்படவில்லை. உடனே மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் உடனடியாக நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டத்தை நடத்திட வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையே அனைத்து அரசு துறைகளும் பின்பற்ற வேண்டும்.
5. பத்திரப்பதிவு துறையில் சங்கங்களின் பதிவாளர் அவர்களின் உத்தரவின் பேரில் பதிவு புதுப்பிக்கும் பொழுது சங்கங்களின் ஆன்லைன் பதிவுகளை எளிமையாக நடைபெற வழிவகை செய்ய வேண்டும்.
6. பொதுவான மக்கள் பிரச்சனைகளுக்கு புகார் தெரிவிக்கும் பொழுது அனைத்து நிர்வாகிகள் அமைப்புகளும் ஒன்றிணைந்து கையொப்பம் இட்டு வழங்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
7. தொடர்ந்து பல ஆண்டுகளாக நிர்வாகிகள் அமைப்புகளுக்கான காலமுறை கூட்டம் நடத்தாத அரசு துறையின் உயர் அதிகாரிகளை அவர்கள் அமைப்பு நிர்வாகிகளுடனும் அனைத்து சங்கத்தினரும் தேர்ந்தெடுக்கும் ஒரு நாளில் அந்த அதிகாரியிடம் தெரிவித்துவிட்டு நேரில் சென்று சந்திப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக