கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் உத்தரவின்படி மாவட்ட முழுவதும் போலீசார் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உத்தரவின்படி நாகர்கோவில் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவசங்கரன் மேற்பார்வையில், இன்று கோணம் பகுதியில் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர்.பேச்சிமுத்து, உதவி ஆய்வாளர் சுமித் ஆல்ட்ரின் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மது போதையில் ஓட்டிவந்தவர்கள், உட்பட போக்குவரத்து விதிகளை மீறிய இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்தவர்கள் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விபத்தில்லா கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் மேலும் தீவிர படுத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக