குடியாத்தம் அருகே 12 வகுப்பு பள்ளி மாணவன் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு !
குடியாத்தம் ,மார்ச் 25 -
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், வளத்தூர் உள்வட்டம், செட்டி குப்பம் கிராமம், BN Palayam கிராம சர்வே எண் 212ல் அமைந்துள்ள ஏரியில் மேல் செட்டி குப்பம் கிராமத்தை சேர்ந்த சுரேந்தர் த/பெ செந்தில் குமார் (லேட்) (வயது17) (பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி யவர்) என்பவர் தான் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது BN Palayam ஏரியில் சேற்றில் சிக்கி இறந்து விட்டார் என்று கிராம விசாரணை தெரியவரு கிறது. மேற்படி நபரின் உடலானது அங்கிருந்து நபர்களால் மீட்கப்பட்டு பிரேதமானது உடற்கூறு ஆய்விற்காக குடியாத்தம் தலைமை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் குடியாத்தம் கிராமிய காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற் கொண்டு வருகின்றனர
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக