நகையை அடமானம் வைக்க சென்றவரிடம் 15 பவுன் நகையை பிடித்த தேர்தல் நிலைய கண்காணிப்பு குழுவினர்.. தாசில்தாரிடம் ஒப்படைப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 மார்ச், 2026

நகையை அடமானம் வைக்க சென்றவரிடம் 15 பவுன் நகையை பிடித்த தேர்தல் நிலைய கண்காணிப்பு குழுவினர்.. தாசில்தாரிடம் ஒப்படைப்பு



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சந்திராபுரம் பகுதியில் தேர்தல் நிலைய கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையின் போது அதில், சென்னை கூடுவாஞ்சேரி -புகழ் அவன்யூ சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் சந்தோஷ்குமார் (36) ஐ டி பணிபுரியவர் மற்றும் அவரது சகோதரர் ஜெய் சூர்யா (33) சொகுசு வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தோட்டக்கலை இயக்குனர் திருமதி சசிகலா தலைமையில் அவரது வாகனத்தை பிடித்து சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி 15 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த நகையை தாராபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் ராமலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். இது குறித்து அதை உரிமையாளர் சந்தோஷ் குமார் இடம் விசாரித்த போது அவரது மனைவியின் சொந்த நகையை சொந்த ஊரான கரூரில் உள்ள முத்தூட் நகை அடமான வங்கியில் வைக்க சென்று கொண்டிருந்தபோது தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பிடித்தனர். உரிய ஆவணத்தை கொண்டு வந்து திருப்பிக் கொள்கிறேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad