பேரணாம்பட்டில் இடம் பிரச்சனை சம்பந்தமாக இரு தரப்பினரிடம் வருவாய் கோட்டாட்சியர் பேச்சு வார்த்தை !
குடியாத்தம் , மார்ச் 19 -
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு வட்டம் (ம) நகரம், பேர்ணாம்பட்டு கிராமம் சர்வே எண்.499/2, பரப்பு.0.10.00 ஏர்ஸ்- ர. புஞ்சை வகைப்பாட்டில் பட்டா எண் 6369 - ல் இஷ் ஆதுல் ஹஸ்நாத் மதரஸா ஸ்கூல் என்ற பெயரில் பட்டா வாக உள்ளது இந்த மதரா ஸாவைச் சேர்ந்த முஸ்லிம் நபர்கள் இன்று (18.03.2026) மாலை 3.00 மணி அள வில் இவ்விடத்தில் சுற்றுச் சுவர் எழுப்பு வதற்காக JCB இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் போது இவ்விடத்திற்கு அருகில் உள்ள சர்வே எண் 499/1A 1A -ல் உள்ள இந்து ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மேற்படி சர்வே எண்.499/2 - ல் தங்களுக்கு 20 அடி அகலத்தில் வழி விட வேண்டும் என கோரிக்கை வைத்தனர் இந்த ஆதிதிராவிட மக்களு க்கு ஏற்கனவே 52 அடி அகலத்தில் வழி உள்ளது. கூடுதலாக கேட்கின்ற 20 அடி அகல வழிக்கு எவ்வித ஆவணங்களும் விசாரணையில் கொடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக இருதரப்பினருக்கும் ஏற்பட்ட சச்சரவினை தீர்க்கும் பொருட்டு ம குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் . செல்வி சுபலட்சுமி இவ்விடத்தை நேரில் பார்வையிட்டு இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி நாளை காலை இரு தரப்பினரையும் அவர்களிடம் உள்ள ஆவணங்களுடன் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசார ணைக்கு ஆஜராகும்படி அறிவுறுத்திய தன் அடிப்படையில் இரு தரப்பினரும் இவ்விடத்தை விட்டு கலைந்து சென்ற னர்.இதில் முஸ்லிம் தரப்பில் சுமார் 300 நபர்களும்,ஆதிதிராவிடர் தரப்பில் சுமார் 40 நபர்களும் கலந்து கொண்டனர் .
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக