ஸ்ரீவைகுண்டம் மார்ச் 19 தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் முதலாவதான ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் பராபவ வருஷ பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.
காலை 7 மணிக்கு விஸ்வரூபம் 9 மணிக்கு மூலவர் பால் திருமஞ்சனம். புது வஸ்திரங்கள் அணி விக்கப்பட்டது. 10 மணிக்கு நித்தியல். மாலை 5 மணிக்கு சாயரட்சை. 6 மணிக்கு உற்சவர் கள்ளப்பிரான் ஸ்ரீதேவி பூதேவி வைகுண்ட நாயகி சோரநாத நாயகி ஆகிய தாயார்களுடன் சயனக் குறட்டிற்கு எழுந்தருளினார்.
6.45 மணிக்கு தீபாராதனை நடந்தது. பராபவ வருஷ பஞ்சாங்கம் 7.30 மணிக்கு உற்சவர் முன் வைக்கப்பட்டது. அதனை அர்ச்சகர் ரமேஷ் எடுத்து கொடுத்து ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி வாசித்தார்.
போதுமான மழை இருக்கும். தானிய விளைச்சல் உண்டு. விலை குறைவும் உண்டு. மக்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். பின்னர் தீர்த்தம். சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் வாசு. நாராயணன்.ராமாநுஜன் சீனு. ஸ்தலத்தார்கள் சீனிவாசன் தேவராஜன். திருவேங்கடத்தான். கண்ணன். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன்
ஆய்வாளர் நிஷாந்தினி அறங்காவலர் குழுத் தலைவர் அருணா தேவி கொம்பையா உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம் பேக்கிரி முருகன் முத்துகிருஷ்ணன் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக