இதையொட்டி உடன்குடி ஒன்றியம் சீர்க்காட்சி கருணபதி அய்யா வைகுண்டரின் பக்தர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் இருந்து அய்யா வைகுண்ட சுவாமியை சப்பரத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கீழ நாலு மூலை கிணறு, பிச்சிவிளை வழியாக சீர்காட்சி கருணபதிக்கு கொண்டு வந்து அங்கு சிறப்பு வழிபாடு செய்தனர்.
இதில் தொழிலதிபர்கள் சிவாஜி நாடார், உத்திரை செல்வன், சீர்காட்சி தொழிலதிபரும், திமுக மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளருமான மகாலிங்கம் மற்றும் அய்யா வைகுண்டரின் பக்தர்கள் பாவண்ணன், காசிபழம், சுந்தரபாண்டி, பூவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி மதியம் அனைவருக்கும் அன்ன தர்மம் வழங்கப்பட்டது. வாகன அலங்காரம் புருஷோத்தமன், கண்ணன், நித்திஷ், பூபாலன், நந்தகுமார், ஜெய்காந்த் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக