காட்பாடியில் இன்று 5-ஆம் தேதி எருது விடும் விழா, போக்குவரத்து மாற்றம் - மாவட்ட காவல்துறை அறிவிப்பு !
காட்ப்பாடி ,மார்ச் 5 -
வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய காட்பாடி பகுதியில், ஸ்ரீ பொன்னியம்மன் மற்றும் ஸ்ரீ கோட்டையம்மன் (எ) ரேணு காம்பாள் ஆலயத்தின் 76-ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவினை முன்னிட்டு மார்ச் 5-ஆம் தேதி இன்று எருது விடும் திருவிழா நடைபெறுகிறது. இதனை ஒட்டி, பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் போக்கு வரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகை யில், விழா நடைபெறும் இன்று போக்கு வரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள தாக வேலூர் மாவட்ட காவல்துறை தெரி வித்துள்ளது. நேரம்: வரும் 05.03.2026 இன்று காலை 6.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை இந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.
சித்தூர் பேருந்து நிறுத்தம் முதல் பிரம்மபுரம் செல்லும் சாலை முற்றிலும் போக்குவரத்துக்காக தடை செய்யப் படுகிறது.மாற்றுப் பாதை பிரம்மபுரம் செல்லும் வாகனங்கள் (கனரக வாகனங் கள் தவிர்த்து), ஓடை பிள்ளையார் கோயில் ஜங்ஷனில் வளைந்து, அக்ஸீலி யம் ரவுண்டானா அருகே உள்ள புத்துக் கோயில் வளைவு வழியாக வி.ஜி.ராவ் நகர் சென்று பிரம்மபுரம் காவல் நிலைய ஜங்ஷனை அடையலாம். திரும்ப வரும் வாகனங்களும் இதே பாதையைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சித்தூர் - திருவலம் மார்க்கம் சித்தூரில் இருந்து திருவலம் செல்லும் வாகனங் கள், காட்பாடி - வள்ளிமலை சாலையில் வளைந்து பள்ளிகுப்பம் மற்றும் சேர்காடு வழியாக திருவலம் செல்லலாம்இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும்சிரமங்களைத் தவிர்க்க, பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவல கப் பணியாளர்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக