தச்சநல்லூரில் வெல்லும் தமிழ் பெண்கள் பரப்புரை - வீடுவிடாகச் சென்று பிரசாரம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 மார்ச், 2026

தச்சநல்லூரில் வெல்லும் தமிழ் பெண்கள் பரப்புரை - வீடுவிடாகச் சென்று பிரசாரம்.

தச்சநல்லூரில் வெல்லும் தமிழ் பெண்கள் பரப்புரை - வீடுவிடாகச் சென்று பிரசாரம் என்.மாலைராஜா, முத்துச்செல்வி பங்கேற்பு

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கழக மகளிரணி சார்பில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் தேர்தல் பரப்புரையானது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

தமிழ்நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் ஸ்டாலினின் மகளிர் படை உறுப்பினர்கள் நேரடியாக சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகள், திட்டங்களை மகளிருக்கு எடுத்துரைத்து பரப்புரை செய்து வருகின்றனர். 

தி.மு.க.வின் வெல்லும் தமிழ்ப் பெண்கள் பரப்புரையின் கீழ், திமுக வர்த்தக அணி இணைச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ என். மாலை ராஜா, நெல்லை தொகுதி பொறுப்பாளர் முத்து செல்வி ஆகியோர் தலைமையில் தச்சநல்லூர் மங்களா குடியிருப்பு தெருக்களில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கழக தலைவர் அவர்களின் திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கியும், இல்லத்தில் உள்ள பெண் வாக்காளர்களிடம் தமிழக அரசின் திட்டங்கள் மூலம் பயன் பெற்று வருவது குறித்தும் கேட்டறிந்தும் பரப்புரை மேற்கொண்டார்.

ஸ்டாலினின் மகளிர் படையினர் பரப்புரையின்போது, முன்னாள் எம்எல்ஏ என். மாலைராஜா பேசும்போது அரசின் நலத்திட்டங்கள் மட்டுமல்லாது, பெண்களின் சம வாய்ப்பு, சம உரிமைக்கும், முன்னேற்றத்திற்கும் திராவிட மாடல் அரசு செய்துள்ள சாதனைகளையும் பட்டியலிட்டு குறிப்பாக மகளிர்களுக்கு விடியல் பயணம் திட்டத்தின் கீழ் கட்டணமில்லாப் பயணம், 

அரசுப் பள்ளியில் பயின்று உயர்க்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூபாய் 1,000/- வழங்கும் புதுமைப் பெண் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1,000/- வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், கோடை காலத்தில் மகளிருக்கு ஆண்டு தோறும் ரூபாய் 2,000/- சிறப்பு நிதி வழங்கும் புதிய திட்டம், அரசுப் பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 40% ஆக அதிகரிக்கப்பட்டது, உள்ளாட்சியில் பெண்களுக்கான 50% இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்தியது, 

பெண்கள் வாங்கும் பத்து லட்சம் வரையிலான சொத்துக்கு 1% பத்திரப்பதிவு கட்டணவிலக்கு, பெண் ஓதுவார்கள் நியமனம் என பல்வேறு புதிய முன்னெடுப்புகளை திராவிட மாடல் அரசு மேற்கொண்டு மகளிருக்கான அரசியல், அதிகாரத்தையும், நியாயமான உரிமைகளையும் உறுதி செய்துள்ளது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பெண்களுக்கு எடுத்துரைத்தார். 

இதில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகேஸ்வரி பகுதி செயலாளர் டாக்டர் சங்கர்,மாவட்ட பிரதிநிதி என்.எம்.ஆர் இசக்கி பாண்டியன், வட்டச் செயலாளர்கள் முத்துராமன், சடாமுனி, பத்மராஜ்,மகளிர் அணி நிர்வாகிகள் அனார்கலி , மேரி, பத்மா, ராஜு, மாநகரப் பொருளாளர் அண்ணாதுரை,மாவட்ட வர்த்தக அணிஅமைப்பாளர் ஷேக் தாவுது, சுத்தமல்லி அர்ஜுனன்,சூப்பர் மணி செல்லப்பாண்டி,ராஜகனி,டவுன் முருகன்,தொமுச இனியன்,அயலக அணி மாரி பாண்டியன்,கண்ணையா பாண்டியன் மைதீன் சக்தி மாரியப்பன், தச்சை அழகு, மாநகரப் பிரதிநிதி பிரான்சிஸ், காந்திமதி நாதன், ஜலிஸ் ரகுமான்,பாலாமடை ளசென்டு,முரசொலி வெங்கடேஷ் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad