தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை ரூ. 2.25 லட்சம் அபராதம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 மார்ச், 2026

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை ரூ. 2.25 லட்சம் அபராதம்.

தடை செய்யப்பட்ட புகையிலை 
விற்பனை ரூ. 2.25 லட்சம் அபராதம் 

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஜெயராமபாண்டியன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரநாராயணன், சக்திமுருகன், ரவி, பிரவீன் ரகு ஆகியோர் இணைந்து (13.3.26) ஒழுகினசேரி, நாகர்கோவில், ஆலங்கோடு, மேல்புறம், புண்ணியம், அருமனை, அம்பலக்கடை, வெள்ளக்கடவு, மயிலோடு, சரலூர் ஆகிய பகுதிகளில் 61கடைகளை ஆய்வு செய்தனர். 

ஆய்வின் போது 6 கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை மற்றும் மெல்லும் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர். 

மூன்றாவது முறையாக கணேஷ் புகையிலை பறிமுதல் செய்ப்பட்டதால் ஒரு விற்பனையாளருக்கு ரூ. 1 லட்சம் ரூபாயும் மற்ற 5 கடைகளுக்கு தலா ரூ. 25,000 மும் உணவு பாதுகாப்புத் துறை மூலம் அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad