கோவில்பட்டி, வள்ளுவர் நகர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விதை சுத்திகரிப்பு நிலையம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 மார்ச், 2026

கோவில்பட்டி, வள்ளுவர் நகர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விதை சுத்திகரிப்பு நிலையம்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி, வள்ளுவர் நகர் பகுதியில் இன்று (13.03.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.127 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.195 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள விதை சுத்திகரிப்பு நிலையம் என மொத்தம் ரூ.322 இலட்சம் மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா,கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷீ மங்கள், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் க.கருணாநிதி, மேயர் பெ.ஜெகன் ஆகியோர் உடன் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad