காக்கங்கரை கூட்டுறவு வங்கியில் இருந்து 37 கிராம் தங்க நகை தனியார் நகைக் கடை யில் அடமானம் வைத்த ஊழியர்கள் !
திருப்பத்தூர், மார்ச் 7
திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை கூட்டுறவு சங்கம் கடன் வங்கியில் நேற்று வங்கி லாக்கரில் இருந்து சுமார் 37 கிராம் தங்க நகை காக்கங்கரை தனியார் அடகு கடையில் சுமார் மூன்று லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்த சூழ்நிலையில், உயர் அதி காரிக்கு புகார் தெரிவிக்கப்பட்டு விசாரிப் பதற்காக கோகிலா S.O அவர்கள் விசார ணை மேற்கொண்டு குற்ற செயலில் ஈடுபட்ட நபர்களும் விசாரணைக்கு வந்த அதிகாரிகளும் நட்புக்கரம் கோர்த்ததால், விசாரணை முழுமை பெறாத சூழ்நிலை யில் காக்கங்கரை கூட்டுறவு வங்கியில் இருந்து புறப்பட்ட விசாரணை அதிகாரி யும், வங்கி ஊழியர் இருவரும் சுமார் அரை மணி நேரம் ராஜாவூர் கிராமத்தில் தீவிர ஆலோசனை மேற்கொண்டு, மிகப் பெரிய தனிநபர் ஆதாயம் அடைந்ததாக தகவல் தெரியவரும் சூழ்நிலையில், விசாரணை அதிகாரி மீது உயரதிகாரி கள் முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட போராட் டம் தொடரும் என சமூக ஆர்வலர் பாஜக நிர்வாகி K.N.சுரேஷ்குமார் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக