ஆம்பூர் அருகே கார் விபத்தில் தி.மு.க. பிரமுகர் பலி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 1 மார்ச், 2026

ஆம்பூர் அருகே கார் விபத்தில் தி.மு.க. பிரமுகர் பலி !

ஆம்பூர் அருகே கார் விபத்தில் தி.மு.க. பிரமுகர் பலி !
திருப்பத்தூர் ,மார்ச்.1- 
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கீழ் முருங்கை என்ற இடத்தில் நின்று கொண்டு இருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதி தி.மு.க. பிரமுகர் பலியானார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியை சேர் ந்தவர் கோவிந்தராஜ் மகன் லட்சுமணன் (வயது35)தி.மு.க. பிரமுகர். இவர் கட்சி நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு சொந்த வேலை காரணமாக சேலத்தில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது இரவு 12.30 மணி யளவில் ஆம்பூர் அடுத்த கீழ் முருங்கை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லட்சுமணன் உட்பட காரில்பயணம் செய்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். 
தகவல் அறிந்து ஆம்பூர் நகர போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச் சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவ மனை க்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர் களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் லட்சுமணன் சிகிச்சை பலனி ன்றி உயிரிழந்தார். பின்னர் போலீசார் லட்சுமணன் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். 
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad