குளச்சல் - விபத்தில் வாலிபர் பலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 மார்ச், 2026

குளச்சல் - விபத்தில் வாலிபர் பலி.

குளச்சல் - விபத்தில் வாலிபர் பலி

குளச்சல் உடையார்விளை பகுதியை சேர்ந்தவர் நிதிஷ்ராஜன் (24). இவர் சம்பவத்தன்று தனது நண்பர் விஜி (23) என்பவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். 

பைக் லட்சுமிபுரம் அருகே செல்லும் போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த பைக்கும் நிதிஷ் ராஜன் பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 

இந்த விபத்தில் எதிரே பைக்கில் வந்த ஜஸ்டின் ராஜ் (36) உட்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் துடித்த இவர்களில் நிதிஷ் ராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குளச்சல் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad