கன்னியாகுமரி சுற்றுலா தளத்தில் கன்னியம்பலம் மண்டபத்தின் இன்றய நிலை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 6 மார்ச், 2026

கன்னியாகுமரி சுற்றுலா தளத்தில் கன்னியம்பலம் மண்டபத்தின் இன்றய நிலை.

கன்னியாகுமரி சுற்றுலா தளத்தில் கன்னியம்பலம் மண்டபத்தின் இன்றய நிலை.

கன்னியாகுமரி சுற்றுலா தளத்தில் கன்னியம்பலம் மண்டபத்தில் இந்து அறநிலைத்துறை சார்பாக சுற்றுலா பயணிகள் கல் மண்டபத்தில் மதுபான குடிப்பதற்காக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த இந்து அறநிலை துறை அதிகாரிகளுக்கு காவல்துறை நண்பர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

அப்பாவி ஏழை தொழிலாளர்கள் கல் மண்டபத்தை சுற்றி வியாபாரம் நடத்தியது சட்டவிரோதமாக இருந்ததாக வியாபாரம் செய்த 13 கடைகளை அப்புறப்படுத்திய இந்து அறநிலைத்துறை ஒரு பகுதியை மட்டும் ஆக்கிரமிப்பு அகற்றாமல் சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசரின் உத்தரவை மதிக்காமல் தாண்டோடித்தனமாக செயல்படும்.

இந்து அறநிலை துறை அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மாவட்ட கமிட்டி சார்பில் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மாவட்ட நிர்வாகத்திற்கும் இந்து அறநிலை துறை அதிகாரிகளுக்கும் இதன் மூலம் தெரிவித்துக் கொண்டனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad