திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா போத்தம்பாளையத்தில் கடந்த 25 ஆண்டு காலமாக நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மறுவாழ்வு இல்லம் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 23/12/2025 அன்று திருப்பூர் மாநகர பகுதி தண்ணீர் பந்தல் காலனி சிக்னல் மெயின் ரோட்டில் ஆதரவின்றி பரிதவித்து வரும் ராமமூர்த்தி வயது 70 என்பவரை 15 வேலம்பாளையம் காவல்துறை சரகத்திற்கு உட்பட்டும் தண்ணீர் பந்தல் காலனி மாமன்ற உறுப்பினர் திரு. செல்வராஜ் ஆகியோர் அனுமதி பெற்று இந்த முதியவரை எங்களது நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மறுவாழ்வு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு படுத்த படுக்கையிலேயே இருந்து வந்தவரை பராமரித்து வந்திருந்தோம்.. கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் உணவு உட்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வந்த ராமமூர்த்தி என்பவரை முதியோர் இல்லத்தில் இருந்து 03/03/2026 அன்று 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் சேர்த்திருந்தோம். நேற்று இரவு 8 சுமார் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலையே சிகிச்சை பெற்று வந்த ராமமூர்த்தி என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் என்ற தகவலை சேயூர் காவல்துறை மூலம் அறிந்து கொண்டு மேலும் இறந்து போன நபர் ராமமூர்த்தி என்பவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் எங்களது நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை சார்பில் இவரது பிரேதத்தை மருத்துவர்கள் பரிந்துரைப்படியும் காவல்துறை அனுமதி பெற்றும் இன்று 12/03/2026 வியாழக்கிழமை மதியம் 2 மணி சுமார்க்கு திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதி ஆத்துப் பாளையத்தில் உள்ள லயன்ஸ் கிளப் மின் மயானத்தில் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மூலம் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த சேவைப் பணியில் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ந. தெய்வராஜ், சிவகாமி, செல்வராஜ் மற்றும் சூர்யகலா, இந்திராணி, செல்வி பலர் கலந்து கொண்டு இவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறிட பிராத்தனை செய்து வந்தார்கள்.
உதவி தேவைப்படுபவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்
ந. தெய்வராஜ் (நிறுவனத் தலைவர்)
நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மறுவாழ்வு இல்லம் போத்தம்பாளையம் திருப்பூர் மாவட்டம்.
செல் நம்பர்: 8667789076.
மாவட்ட செய்தியாளர் அ. காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக