திருப்பூரில் கேஸ் ஏஜென்சி சிலிண்டர் பதுக்கல் புகார் ஏஜென்சிக்கு சீல் வைக்கப்பட்டது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 மார்ச், 2026

திருப்பூரில் கேஸ் ஏஜென்சி சிலிண்டர் பதுக்கல் புகார் ஏஜென்சிக்கு சீல் வைக்கப்பட்டது


இஸ்ரேல் ஈரான்  போரை முன்னிட்டு கேஸ் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது இந்த சூழலில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலையில் உள்ள கேஸ் ஏஜென்சி வணிக சிலிண்டர்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது இது சம்பந்தமாக நல்லூர் நுகர்வோர் மன்ற தலைவர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட வழங்கள் அதிகாரி சரவணன் ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வின்போது ஏஜென்சி உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் ஒத்துழைக்காததால் அதிகாரிகள் கேஸ் ஏஜென்சி அலுவலகத்தை சீல் வைத்தனர் இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

மாவட்ட செய்தியாளர் அ. காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad