கணியூர் காவல்துறையினர் சார்பில் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு.! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 மார்ச், 2026

கணியூர் காவல்துறையினர் சார்பில் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு.!


திருப்பூர் மாவட்டம்

மடத்துக்குளம் வட்டம் கணியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துங்காவி கிராமத்தில், காவல்துறையினர் சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் IPS உத்தரவின் பேரில், உடுமலைப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் நமச்சிவாயம் DSP அவர்களின் மேற்பார்வையில் இந்த விழிப்புணர்வு முகாம் ஒருங்கிணைக்கப்பட்டது.கணியூர் காவல் ஆய்வாளர் பஞ்சுலட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார்.  உதவி ஆய்வாளர் கார்த்திக் குமார் மற்றும் காவலர் சிவகுருநாதன் ஆகியோர் துங்காவி கிராம மக்களிடையே விரிவான ஆலோசனைகளை வழங்கினர்.  விழிப்புணர்வின் ஆலோசனையின் போது பொதுமக்களிடம் சிசிடிவி கேமராக்களை வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பொருத்துவதன் மூலம் குற்றச் செயல்களைத் தடுக்கவும், குற்றவாளிகளைக் கண்டறியவும்,  சந்தேகத்திற்குரிய புதிய நபர்கள் யாரேனும் தென்பட்டால் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். பெண்கள் தனியாகச் செல்லும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.  வெளியூர்களுக்குச் செல்லும் போது வீட்டைப் பூட்டிச் செல்வது குறித்து முன்கூட்டியே காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad