குடியாத்தத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை!
குடியாத்தம் ,மார்ச் 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் 48 செதுக்கரை கிராமம் அசோக் நகர் ஆர் எஸ் ரோடு ன்ற முகவரியில் வசித்து வரும் செந்தில் - அவன்யா தம்பதியரின் மகன் விகாஸ் (வயது 20) என்பவர் நேற்று 25-03-2026 அன்று இரவு 10.00 மணியள வில் மது போதையில் அசோக் நகரில் அக்கம்பக்கத்தினரிடம் பிரச்சனை செய்த தாகவும் பின்னர் இன்று 26-03-2026 நள்ளி ரவில் குடியாத்தம் பள்ளிகொண்டா சாலை ஆர் எஸ் ரோடு படிப்பகம் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர்ல் தூக்கிட்டு கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு மேற்படி நபரின் பிரேதமானது குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேற்படி நபர் இந்து அருந்ததியர் வகுப்பை சார்ந்தவர் என்றும் மேற்படி நபருக்கு திருமணம் ஆகவில்லை மற்றும் உடன்பிறந்த சகோதரி ஒருவர் சுமார் ஒன்றரை ஆண்டு களுக்கு முன்பு தற்கொலை செய்து இறந்து உள்ளார் என்பதும் விசாரணை யில் தெரிய வருகிறது. இது சம்பந்தமாக குடியாத்தம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக