கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட காரங்காடு மொட்டவிளை பகுதியை சேர்ந்த பச்சைமால் மகன் தர்மலிங்கம் (51) என்பவர் உத்தேசமாக ஏழு நாட்களுக்கு முன்பு தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில், உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உறவினர்கள் வந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ அணி செயலாளர் அசார் தலைமையிலான குழுவினர், உடல் அழுகி புழுக்கள் அரித்த நிலையில் துர்நாற்றத்துடன் தூக்கில் தொங்கியிருந்த சடலத்தை மீட்டு, தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட நிருபர்.நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக