கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே தென்கரை உடுப்பி ரெஸ்டாரன்ட் பகுதியில் இன்று ஏற்பட்ட கோர சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம்னி பஸ் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை மோதியதாக கூறப்படுகிறது. விபத்துக்குப் பிறகு கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ் அருகில் உள்ள வள்ளி ஆற்றுப் பகுதியில் தொங்கிய நிலையில் கிடந்தது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட நிருபர்.நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக