நாட்றம்பள்ளி அருகே சிங்கப்பூரிலிருந்து விடுமுறையில் வந்த தம்பியை வெட்டிய அண்ணன் கத்தியுடன் காவல் நிலையத் தில் சரண் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 மார்ச், 2026

நாட்றம்பள்ளி அருகே சிங்கப்பூரிலிருந்து விடுமுறையில் வந்த தம்பியை வெட்டிய அண்ணன் கத்தியுடன் காவல் நிலையத் தில் சரண் !

நாட்றம்பள்ளி அருகே சிங்கப்பூரிலிருந்து  விடுமுறையில் வந்த தம்பியை வெட்டிய அண்ணன் கத்தியுடன் காவல் நிலையத் தில் சரண் !
திருப்பத்தூர் ,மார்ச்.27- 
     திருப்பத்தூர் மாவட்டம் நாட்றரம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் களிமுத்தன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் மகன் இளவரசன் (வயது 45).  இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் ஐந்து ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். 
இவருக்கும் இவருடைய பெரியப்பா மகன் சத்யன் (வயது 47) என்பவருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் வழக்கு நீதிமன்ற த்தில் தொடர்ந்து அதற்கான தீர்ப்பும் வெளியாகிதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த இடத்தில் பொதுவான கிணறு உள்ளது. இந்த கிணற்றில் தண்ணீர் எடுக்க அண்ணன் தம்பிகள் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து இளவரசன் விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பி உள்ளார். அப்போது அந்த கிணற் றில் தண்ணீர் எடுக்க சென்ற போது மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இளவரசன் கிணற்றில் இருந்த பைப் லைன் தனக்கு சொந்தம் என வெட்டி எடுத்துச் சென்றுள் ளார். இதனால் சத்தியன் ஆத்திரத்தில் இருந்து உள்ளார். இந்த நிலையில் இளவரசன் நிலத்தில் இருந்த வேப்ப மரத்தை வெட்டுவதற்காக பூஜை போட்டு உள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் சத்யன் மறைத்து வைத்திருந்த கத்தி யால் இளவரசனை வயிற்றுப் பகுதி மற்றும் கை கால்களையும் வெட்டியுள் ளார். இதனால் சம்பவ இடத்திலேயே இளவரசன் உயிரிழந்தார். இளவரசன் உயிரிழந்த அறிந்த அண்ணன் சத்யன் தானாகவே நாட்றம்பள்ளி காவல் நிலை யத்தில் சரண் அடைந்தார்.  சம்பவம் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனை க்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நாட்றம்பள்ளி அருகே கிணறு பிரச்சனை காரணமாக அண்ணனே தம்பியை குத்தி கொலை செய்த சம்பவம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad