இராணிப்பேட்டை மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலர் துணை ஆட்சியர் டி.மீனா பாராட்டு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 மார்ச், 2026

இராணிப்பேட்டை மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலர் துணை ஆட்சியர் டி.மீனா பாராட்டு !

 இராணிப்பேட்டை மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலர் துணை ஆட்சியர் டி.மீனா பாராட்டு !
ராணிப்பேட்டை , மார்ச் 27 -
          ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு அரசின் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை துறையின் கீழ் இயங்கும் சமூக நீதி விடுதியின் சமைய லர் ஜெ.சங்கர் 31.03.2026ல் பணி நிறைவு பெறுவதை முன்னிட்டு இன்று இராணிப் பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவல கத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழவில் மாவட்ட நல அலுவலர் துணை ஆட்சியர் டி.மீனா பாராட்டு கேடையம் வழங்கி பாராட்டினார்.  இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு துணை ஆட்சியர் டி.மீனா தலைமை தாங்கி பணி நிறைவு பெறும் ஜெ.சங்கர் ஆற்றிய பணிகளை பாராட்டி கேடையம் வழங்கி பேசினார்.
ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும் தமிழ்நாடு மேல்நிலைப்ள்ளி தொழிற்கல்வி ஆசிரி யர் கழகத்தின் தலைவருமான முனைவர் செ.நா.ஜனார்த்தனன் சால்வை அணிவி த்து பாராட்டினார். சமையலர் சங்க தலை வர் ஜி.வெங்கடேசன், பொருளாளர் பரிமளா மற்றும் உடன் பணிபுரிந்த சமையலர்கள் மற்றும் காவலர்கள். லமுன்னதாக காப்பாளர் எம்.எம்.ஞான சேகரன் நிகழ்வினை ஒருங்கிணைத் தார்.  காப்பாளர்கள் எஸ்.அன்பரசு, டி.ஹரி, எஸ்.இ.ஏழுமலை, காளினிகள் ஜி.மஞ்சுளா, வி.டில்லிபாய், அனிதா ஓய்வுபெற்ற வேளாண் துறை கண் காணிப்பார் ஜெ.சந்திரன், கூட்டுறவுத் துறை ஓய்வுபெற்ற செயலாளர் ஜெ.திருநாவுக்கரசு, ஜெ.பாபு, ஆட்சியர் அலுவலக இந்தியன் வங்கி நகை மதிப் பீட்டாளர் ஜெ.ஆறுமுகம், காளிகாம்பாள் அறக்கட்டளை தலைவர் பாலகுமார் சி.விஸ்வநாதன், சி.சதீஸ் வஞ்சூர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் சால்வை அணிவித்து பாராட்டி பேசினர்.  பணி நிறைவு பெறும் ஜெ.சங்கர் ஏற்புரை வழங்கினார்.  முடிவில் எஸ்.தேன்மொழி. எஸ்.மகாலட்சுமி, எஸ்.பாலாஜி, எஸ்.ச சி குமார்   ஆகியோர் நன்றி கூறினர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad