திருவண்ணாமலை அருகே பொது வழி பாதையை ஆக்கிரமிப்பு செய்த நபரை கைது செய்ய கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 24 மார்ச், 2026

திருவண்ணாமலை அருகே பொது வழி பாதையை ஆக்கிரமிப்பு செய்த நபரை கைது செய்ய கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் !

திருவண்ணாமலை அருகே பொது வழி பாதையை ஆக்கிரமிப்பு செய்த நபரை கைது செய்ய கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் !
திருவண்ணாமலை , மார்ச் 24 -
     திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பள்ளிப்பட்டு கிராமத்தில் மயானத்திற்கு மற்றும் விவசாய நிலத்தி ற்கும் செல்லும் பொது வழி பாதையை தனி நபர் ஆக்கிரமித்து அவ்வழியில் செல்லும் பொதுமக்களை மிரட்டுவதும் , பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற அரஜாக செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்.இது குறித்து கிராம நிர்வாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளப் படவில் லை எனவும் ஆக்கிரமிப்பு செய்து தாக்கு தல் நடத்திய நபர் மீது வழக்கு பதிவு செய்து பொது வழி பாதையை எங்களு க்கு மீட்டு தர கோரி பொதுமக்கள் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செய்தியாளர் T.R.கலையரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad