அமமுக வில் இருந்து விலகிய மாவட்ட சார்பு அணி நிர்வாகி, குடியாத்தம் தொகுதியில் போட்டியிட அ இ பு த ம மு கழகத்தில் விருப்ப மனு !
குடியாத்தம் ,மார்ச் 22 -
வேலூர் மாவட்டம குடியாத்தம் தொகுதி பெரும்பாடி கிராமத்தை சேர்ந்த மாஸ்டர் N. கண்ணபிரான் தீவிர புரட்சி தலைவர் ரசிகர். அமமுக கட்சி தொடங்கும் நாளு க்கு முன்னரே, கழகத்தின் முழு நேர விசு வாசியாக இருந்து, தொடர்ந்து 7 ஆண்டு களுக்கும் மேலாக கழக. it wing ஐ வலுப் படுத்த மாவட்ட பொறுப்பில் இருந்து தீவிர பணியாற்றி வந்தவர் இவருடைய தீவிர பணியை கண்டு கடந்த நாடாளு மன்ற தேர்தலின் போது குடியாத்தம் சட்டமன்ற தொகுதியின் தொகுதி பொறு ப்பாளராக TTV தினகரனால் பணியமர்த் தப்பட்டார். தற்பொழுது அமமுக பொதுச் செயலாளர் TTV தினகரன் எடபாடியுடன் இணைந்தது NDA கூட்டணிக்கு சென்ற நிலையில், புரட்சிதாய் சின்னம்மா அவர் களால் தொடங்கி வழிநடத்தப்படும் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் தன்னுடைய ஆதர வாளர்களுடன் இணைந்தார் மேலும் நேற்றைய தினம் போயஸ் கார்டன் ஜெய லலிதா இல்லத்தில் உள்ள முகாம் அலுவ லகத்தில் சின்னம்மாவின் கட்சியின் சார்பாக குடியாத்தம் சட்டமன்ற தனித் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார்.அடப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி குடும்பத்தில் இருந்து வந்த கண்ண பிரான், புரட்சி தலைவர் கழக செயல் பாடுகளில் அதிக ஈடுபாடு கொண்டவர். வரும் தேர்தலில் சின்னம்மா சுற்று பயணம் வரும் போது நூற்றுக்கணக்கான புரட்சி தலைவர் எம் ஜி ஆர் ன் ஆதரவா ளர்களை கழகத்தில் இணைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக