ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம், புஞ்சை காளமங்கலம் கிராமம், கணபதிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் யாதுமாகி நிற்பவள் அறக்கட்டளையின் சார்பாக உலக மகளிர் தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது...
அரசு ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவர் திருமிகு ந.அன்புச்செல்வி அவர்கள் முன்னிலையில்
யாதுமாகி நிற்பவள் அறக்கட்டளையின் தலைவர் ர.மோனிஷா மற்றும் செயற்குழு உறுப்பினர் மு.மாலினி அவர்கள் தலைமையில்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவருக்கும்
அவர்களின் சமூக சேவையை பாராட்டி அறக்கட்டளையின் சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருது என்ற நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது... அறக்கட்டளையின் சார்பாக தலைவர் ர.மோனிஷா அவர்கள் உலக மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்..
நிகழ்ச்சியினை அறக்கட்டளையின் நிறுவனர் புன்னகை தூரன் இரா.சங்கர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்...
தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக