கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் போதைப் பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் தற்போது மயிலாடி அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் தாகூர் இன்னாசி என்பவரது மகன் தாமஸ் காட்வின்(44) என்பவர் விற்பனைக்காக வைத்திருந்த அரிதான உயர்ரக போதை பொருளான மெத்தம் பேட்டமைன் - 04 கிராம், 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
நாகர்கோவில் மதுவிலக்கு போலீசார் மேற்படி குற்றவாளியை கைது செய்தனர். குற்றத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
எந்தவிதமான பாரபட்சமும் இன்றி போதை பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக