திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள முதலிபாளையம் சிட்கோ பகுதியில் உள்ள தாட்கோ எதிரில் குருவாயூரப்பன் நகர் பகுதியில் உள்ள வேஸ்ட் குடோன் தீப்பற்றி எரிந்தது இதை கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் நல்வாய்ப்பாக அருகில் அதிக அளவு வீடுகள் இல்லாததால் தீ மேலும் பரவாமல் இருந்தது மேலும் இந்த தீ விபத்திற்கு காரணம் மின்கசிவா இல்லை வேற ஏதாவது காரணம் உள்ளதா என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக