பேர்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1361 மது பாட்டில்கள் பறிமுதல் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 18 ஏப்ரல், 2026

பேர்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1361 மது பாட்டில்கள் பறிமுதல் !

 பேர்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1361 மது பாட்டில்கள் பறிமுதல் !
குடியாத்தம் , ஏப்ரல் 17 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே 1361 மது பாட்டில்கள் . பதுக்கல்  3..பேர் தலை மறைவு- மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் விசாரணை  வேலூர் மாவட்டம் குடியாத்தம், தமிழக சட்டசபை  தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடை பெறுவதை முன்னிட்டு மூன்று நாட்கள் அரசு மதுபான டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ள நிலையில்
பேரணாம்பட்டு அருகே மத்தூர் பகுதியில் அரசு மதுபான பாட்டில்களை அதிக அளவில் வாங்கி பதுக்கி வைத்து கள்ளத் தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய பதிக்க வைக்கப்பட்டு இருப்பதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில்
குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மத்தூர் பகுதியில் வேளாங் கண்ணி என்பவர் வீட்டில் பதிக்கி வைக் கப்பட்டிருந்த 1361 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர் மேலும் தலைமறை வாக உள்ள வேளாங்கண்ணி, குபேந்தி ரன், யசோதா, ஆகிய மூன்று பேரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1361 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad