அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நெக்னா மலைக்கு சாலை வசதி ஏற்படுத்தி தரு வேன் அதிமுக வேட்பாளர் செந்தில்குமார் உறுதி !
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக வேட்பாளர் கோ.செந்தி ல் குமார் ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெக்னாமலை கிராமத்திற்கு சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அப்போது அங்கு பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.அதனை தொடர்ந்து அவர்க ளிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசினார்.அப்போது அவர் பேசியதாவது நெக்னாமலை கிராமத்திற்கு சாலை வசதி கோரி பால ஆண்டு காலமாக கேட்டு வருகின்றீர்கள், கடந்த அதிமுக ஆட்சியின் போது இந்த மலைக்கு தற்காலிக மண் சாலை அமைக் கப்பட்டது, அதன் பின்னர் வந்த திமுக ஆட்சி அதற்கான எந்த ஒரு நடவடிக் கையும் மேற்கொள்ளவில்லை, இந்த முறை அதிமுக ஆட்சி அமைந்த உடன் இந்த மலைக்கு உடனடியாக சாலை அமைத்து தருவேன். மலைப்பகுதியில் புதியதாக ரேஷன் கடை கட்டித் தரப்படும், மூடப்பட்ட அம்மா மினி கிளினிக்கை மீண்டும் திறந்து வைப்பேன், இளைஞர் களுக்காக விளையாட்டு மைதானம் அமைத்து தருவேன், மக்களோடு மக்களாக இருந்து செயல்பட எனக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பு தாருங்கள் என அவர் கேட்டுக் கொண்டார். பிரச் சாரத்தின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி. சம்பத்குமார், மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர்.பசுபதி,பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வேல்முருகன், ஒன்றிய துணை செயலாளர் எம். ஜி.ஜெய்சங்கர், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி நிர்வாகி பி.ஜி.எம். சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சீனிவாசன், மேகலா திருப்பதி, ஒன்றிய விவசாய அணி நிர்வாகிகள் ராமசாமி, சீனிவாசன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் குமார், பாரதிதாசன், கோவிந்தசாமி, நெக்னாமலை முனிசாமி, பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கே.டி.எஸ் கார்த்திக், எஸ். செல்வகுமார், கே.ஜனா உட்பட அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக