தனித் தொகுதி வேட்பாளர் மு.பெ. கிரி ஆதரித்து அமைச்சர் எ.வ.வேலு தீவிர வாக்கு சேகரிப்பு !
திருவண்ணாமலை , ஏப்ரல் 18 -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தனி தொகுதியின் வேட்பாளர் மு.பெ. கிரியை ஆதரித்து பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர். எ.வ. வேலு தேர்தல் பிரச்சாரம் செய்து அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.
முன்னதாக பெரியகோளாப்பாடி ,செ.நாச் சிபட்டு கூட்ரோடு,செங்கம் பஸ் நிலையம், போளூர் சாலை கலைஞர் சிலை முன் முனைசந்திப்பு சாத்தனூர், தண்டராம் பட்டு மற்றும் அதனைத் தொடர்ந்து தானி ப்பாடியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வேட்பாளர் மு.பெ.கிரி யை ஆதரித்து பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்.எ.வ. வேலு பேசுகையில் செங்கம் தொகுதி ஐந்தாண்டுகளில் சுமார் 3,000 கோடிக்கு மேல் இந்த தொகுதியை வளர்ச்சி திட்ட பணிகள் செய்து வளர்ச்சி பெற செய் துள்ளார். குறிப்பாக சாலை மேம்பாலம் பள்ளி கட்டிடம் மருத்துவமனை என கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வந்துள்ளார். செங்கம் பேரூ ராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தியது. பகுதி ஏழை எளிய மாணவ மாணவியர் உயர் கல்வி பெறுவதற்கு பல்வேறு போராட்டங்கள் நடத்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வந்த பெருமை.மு.பெ. கிரி எம் எல் ஏ வை சாரும். அது மட்டும் இன்றி குடி தண்ணீர் பிரச்சனை தீர்ப்பதற்காக செங்கம் நகரில் ஆற்றில் தடுப்பணை. விபத்துக்கான அவசர சிகிச்சை பிரிவு மகப்பேறு சிறப்பு பிரிவு என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி இப்பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார் .அது மட்டும் இன்றி தமிழக முதல்வர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை புதுமைப் பண் திட்டம் தமிழ் புதல்வன் திட்டம் நான் முதல்வன் திட்டம் காலை சிற்றுண்டி குடும்பம் தோறும் 8,000க்கு கூப்பன் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றி உள்ளார் அதுமட்டுமின்றி ஒன்றிய மோடி அரசு சி ஏ ஏ என்ற இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் ஒன்றிய மோடி அரசு நாடாளுமன்றத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்கள் கொண்டுவரப்பட்டு சட்டத்தை நிறைவேற்றுவதற்காக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி அன்பு மணி ராமதாஸ் சி ஏ ஏ சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து இஸ்லாமியர் களுக்கு துரோகம் செய்துவிட்டனர். ஆனால் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்த வர்களுக்கும் என்றும் பாதுகாப்பு அரணாக இருப்பது திராவிட முன்னேற் றக் கழகம் என பேசினார். மீண்டும் தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்று இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் சட்டங்களாலும் திட்டங்களா லும் என்றும் பாதுகாப்பாக இருப்பது திமுக எனவும் திமுக மீண்டும் தமிழ் நாட்டை பாதுகாப்பதற்காக ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் மீண்டும் நமக்கு சட்டங்களும் திட்டங்களும் சலுகைகளும் கிடைக்க வேண்டும் என்றால் உதயசூரி யன் சின்னத்தில் வாக்களித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்க நீங்கள் அனைவரும் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரியை வெற்றி பெற செய்ய வேண்டும் என சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சியின் நிர்வாகிகள் பெண்கள் இளைஞர்கள் , பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் T.R.கலையரசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக