ஸ்ரீவைகுண்டம் ஏப்ரல் 18. நவதிருப்பதிகளில் முதலாவதான கள்ளப்பிரான் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
காலை 4 மணிக்கு விஸ்வரூபம். 4.30 மணிக்கு திருமஞ்சனம். உற்சவர் 6 மணிக்கு தேருக்கு எழுந்தருளினார். 9.30 மணிக்கு தேரை கோபாலா கோவிந்தா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.
பகல் 1.30 மணிக்கு கோவில் வாசலில் உணவு இடைவேளைக்கு நிறுத்தப்பட்டது. மாலை 4.15 மணிக்கு மீண்டும் புறப்பட்டு 7.15 மணிக்கு நிலை வந்நடைந்தது.
இரவு தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலத்தில் மாடவீதி ரதவீதி புறப்பாடு நடந்தது. இன்று தீர்த்தவாரி நடைபெறுகின்றது. இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஸ் வாசு. நாராயணன் .ராமானுஜன். சீனு.
ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி சீனிவாசன் தேவராஜன் சீனிவாசன் கண்ணன்.வெங்கடேசன். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் எழுத்தர் இசக்கிபாண்டி. உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக