72 வயது மூதாட்டியை கொலை! 2 பேரின் வீடுகளை அடித்து உடைத்து கொளுத்திய 10 பேர் மீது வழக்கு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 18 ஏப்ரல், 2026

72 வயது மூதாட்டியை கொலை! 2 பேரின் வீடுகளை அடித்து உடைத்து கொளுத்திய 10 பேர் மீது வழக்கு !

 72 வயது மூதாட்டியை கொலை! 2 பேரின் வீடுகளை அடித்து உடைத்து கொளுத்திய 10 பேர் மீது வழக்கு ! 
பேரணாம்பட்டு , ஏப்ரல் 18 -
           வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரவாட்லா மலைப்பகுதியில் (72 வயது) மூதாட்டியை கொலை செய்த இருண்டு பேரின் வீடுகளை அடித்து உடைத்து கொளுத்திய கிராம மக்கள் மற்றும் உறவினர்கள்,10 பேர் மீது வழக்கு,வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவாட்லா மலைப்பகுதியில் உள்ள பாஸ்மார்பெண்டா கிராமத்தை சேர்ந்த சியாமளா (வயது 72) வயதான மூதாட்டி இவரை கடந்த 10 ம் தேதி அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் (வயது 28) சூர்யா (வயது 24) ஆகியோர் நகைக்கு ஆசைப் பட்டு கழத்தை கயிற்றால் இறுக்கி  கொலை செய்து மூதாட்டியின் சடலத்தை அருகில் உள்ள காப்பு காட்டில் குழி தோண்டி புதைத்தனர்.இது குறித்து வழக்கு பதிந்து பேரணாம்பட்டு இன்ஸ் பெக்டர் பிரபு கொலையாளிகளை கண்டு பிடித்து நேற்று முன்தினம் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் சடலம் வேலூரில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை யில் பிரேத பரிசோதனை நடைப்பெற்று முடிந்து நேற்று முன்தினம் மாலை அரவட்லா மலைப்பகுதியில் உள்ள பாஸ் மார்பெண்டா கிராமத்திற்க்கு உறவினர் கள் கொண்டு வந்தனர்.சடலத்தை பார்த்த உறவினர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் கொந்தளித்து கொலையாளி களின் வீட்டினை சூறையாடி வீட்டில் உள்ள பொருட்களை அடித்து  வீட்டினை கொழுத்தியுள்ளனர் அதில் இருவரின் வீட்டில் இருந்து இரு சக்கர வாகனங்கள், பிரிட்ஜ், வாஷிங் மிஷன்,பீரோ, கட்டில் உள்ளிட்ட வீட்டு பொருட்கள் அனைத்தும் எறிந்த கறுகி இருந்தது இதனை அறிந்த பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கூட்டத்தினை கலைத்து தண்ணீர் ஊற்றி அனைத்து பின்பு வீட்டில் எறிந்த சாமான்களை காவல் நிலையத் திற்கு வாகனம் வைத்து கொண்டு வந்தனர்.மேலும் இதுகுறித்து பாதிக்கப் பட்டவரின் வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்ததில் வீட்டினை அடித்து கொளுத்தி ய அதே பகுதியை சேர்ந்த 12 பேர்  என்பது தெரியவந்துள் ளது அதில் நேற்று 10  நபர்களான வெங்கடேசன் (வயது 50)சுரேஷ் (வயது 47) இரத்தின வேல் (வயது 36) முத்துவேல் (வயது 31) லோகநாதன் (வயது 31)சக்திவேல்(வயது 27)பரத்(வயது 21) சிம்பு (வயது 20) நவின் குமார் (வயது 23)திருமலை (வயது 23) ஆகியோரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர் மேலும் தலைமறைவாக உள்ள வேலன், கோபி ஆகியோரையும் போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad