குடியாத்தத்தில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 136 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் !
குடியாத்தம் ,ஏப்ரல் 14 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புரட்சியா ளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் . 136 வது பிறந்தநாள் முன்னிட்டு. அனைத்திந்திய அண்ணா திமுக வெற்றி வேட்பாளர் ஜி பரிதா. கே வி குப்பம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் ஜெகன் மூர்த்தியார் ஆகியோர் டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் அவர்களின் 136 வது ஆண்டு பிறந்த நாளை ஒட்டி இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் ஆர் எஸ் ரோடில் அமைந்துள்ள புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு புரட்சி பாரதம் மாநில தலைவர் கே வி குப்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு பூவை ஜெகன் மூர்த்தியார் அவர்களும், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி ஜி பரிதா புருஷோத்தமன் அவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி, பேர்ணாம்பட்டு ஒன்றிய கழக செயலாளர் டி பிரபாகரன் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப் பாளர் சதீஷ் சங்கர், மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி, நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜி கே ரவி, புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் மேகநாதன், பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர் ஜெகன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் எஸ் அருணோதயம், புதிய நீதி கட்சி மாவட்ட செயலாளர் செந்தில்குமார், தமிழ் மாநில பகுஜன் சமாஜ்வாதி மாவட்ட செயலாளர் பிரித்திவிராஜ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக குடியாத்தம் தேர்தல் பொறுப்பாளர் பூபாலன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் குணசேகரன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் பாபாஜி மற்றும் கழக நிர்வாகிகளும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக