தேர்தலின் போது நடைபெற்ற மோதலில் திமுக மற்றும் அதிமுக சேர்ந்த 19 பேர் மீது வழக்கு பதிவு. ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 25 ஏப்ரல், 2026

தேர்தலின் போது நடைபெற்ற மோதலில் திமுக மற்றும் அதிமுக சேர்ந்த 19 பேர் மீது வழக்கு பதிவு. !

 தேர்தலின் போது நடைபெற்ற மோதலில் திமுக மற்றும் அதிமுக சேர்ந்த 19 பேர் மீது  வழக்கு பதிவு. !
வாணியம்பாடி,ஏப்ரல்.25- 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வள்ளிப் பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 194 வாக்குச் சாவடி மையத்தில் மதசார்பற்ற முற் போக்கு கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் உடன் சென்ற திமுக வினருக்கும் அப்பகுதியில் இருந்த அதிமுக முன்னாள் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் உடன் இருந்த அதிமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுகவை சேர்ந்த 11 பேர் மீதும், திமுகவை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் விசாரணை.
 
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad